பூமியை அழகாக்க மரங்களை நடுங்கள் : தீவிரவாத அமைப்பின் ஆச்சரிய அறிக்கை

ஆஃப்கானியர்கள் நிறைய மரங்களை நட வேண்டும் என்று அந்நாட்டின் தாலிபன் அமைப்பின் தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸதா வலியுறுத்தி உள்ளார்.

படக்குறிப்பு,

தீவிரவாத அமைப்பின் ஆச்சரிய அறிக்கை

பொதுமக்கள் மற்றும் போராளிகள் ஒன்று அல்லது பல பழம் தரும் மரங்களை அல்லது பழம் தராத மரங்களை பூமியை அழகுபடுத்தும் நோக்கிலும், அல்லாவின் படைப்புகளின் நலனுக்காகவும் நிறைய நட வேண்டும் என்று அறிக்கை ஒன்றின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

காடுகள் அழிப்பு பிரச்சனையால் ஆஃப்கானிஸ்தான் கடும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது.

எரிப்பதற்கும், சட்டவிரோத விற்பனைக்கும் மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன.

படக்குறிப்பு,

பூமியை அழகாக்க மரங்களை நடுங்கள் : ஹிபத்துல்லா அகுந்த்ஸதா

சுற்றுச்சூழல் குறித்து தாலிபன் அமைப்பிடமிருந்து அறிக்கைகள் வருவது மிகவும் அரிதான ஒன்று.

கடந்தாண்டு மே மாதம் தாலிபன் அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அகுந்தஸதா, ராணுவ தளபதி என்பதை காட்டிலும் மத தலைவராக மிகுந்த வலுவான நன்மதிப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்