ஐ.எஸ். தாக்குதலால் இராக் கலாசார சின்னங்களுக்கு பெரும் பாதிப்பு

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரால் இராக்கின் கலாசார சின்னங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் முன்பு அஞ்சியதைவிட மிகவும் அதிகமாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் கலாசார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மேலும் சேதங்கள் நிகழாமல் இருக்கும் வகையில், தொல்பொருள் தளங்களை பாதுகாக்க யுனெஸ்கோ விரும்புவதாக அதன் தலைவர் இரினா போகோவா தெரிவித்திருக்கிறார்.

சமீபத்திய வாரங்களில் தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மொசூலின் பகுதிகளிலுள்ள சுரங்கங்களில், கொள்ளையடிக்கப்பட்ட தொல்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்திருப்பதாக இராக் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

2015 ஆம் ஆண்டிலிருந்து முற்கால நகரமான நிம்ருடியின் 80 சதவீத பழங்கால எச்சங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக இராக் அரசு மதிப்பிட்டுள்ளது.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்