ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின் இரண்டாம் ஆண்டு நினைவு பேரணி
கொலை செய்யப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் போரீஸ் நெம்ட்சாஃபின் ஆதரவாளர்கள், அவரது இரண்டாம் ஆண்டு நினைவு பேரணியை நடத்துவதற்கு முன்னதாக, அவர் கொலை செய்யப்பட்ட கிரம்ளின் மாளிகைக்கு அருகிலுள்ள பாலத்தின் மீது, மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பட மூலாதாரம், AFP
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் தீவிர விமர்சகர் அலெக்ஸி நவால்னி உள்பட எதிரணி பிரமுகர்கள் பலர் இந்த பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயின்ட் பீட்ஸ்பர்க் மற்றும் யகேட்டரீன்பர்க்கிலும் பேரணிகள் நடைபெறு என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் துணைப் பிரதமரான போரீஸ் நெம்ட்சாஃபின், சுட்டுகொல்லப்படுவதற்கு முன்னதாக கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் ஈடுபாடு பற்றிய ஆவணம் ஒன்றை வெளியிட திட்டமிட்டு வந்தார்.
இவரை கொலை செய்ததற்காக 5 செசனியர்கள் மீது அக்டோபர் மாதம் விசாரணை நடைபெற்றது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்