ஜப்பானின் வழுக்கைத்தலையர்களின் உற்சாக போட்டி

ஜப்பானில் 30க்கும் மேற்பட்ட வழுக்கை தலை ஆண்கள் வருடாந்திர சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பில் வழக்கத்துக்கு மாறான கயிறு இழுக்கும் போட்டியும் நடைபெறுகிறது..

வழுக்கை விழுந்த இரு ஆண்களுக்கு இடையே இந்த போட்டி நடக்கும்.

போட்டியாளர்களின் வழுக்கை மண்டையில் காற்று வெளியேற்றப்பட்ட கப் இணைக்கப்பட்டிருக்கும் அந்த கப்களில் ஓர் ஒற்றை சிவப்பு கயிறு மாட்டப்பட்டிருக்கும்.

போட்டி தொடங்கிய உடன் போட்டியாளர்கள் எதிரணியினரின் மண்டையில் உள்ள கப்களை இழுக்கப் போராடுவார்கள்.

1989ல் வழுக்கை மண்டை கொண்ட ஆண்களுக்கான கிளப் உருவாக்கப்பட்டது.

அன்றிலிருந்து நாடு முழுக்க 65 உறுப்பினர்களை கவர்ந்திழுத்துள்ளது.

வழுக்கையை ஆக்கப்பூர்வமான முறையில் அணுக பொதுமக்களை ஊக்குவிப்பதே இந்த கிளப்பின் நோக்கம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்