ஜோர்டான், செளதி அரேபியா எல்லை அருகே இராக் படையினர் பெருமளவில் கொல்லப்படலாம் என அச்சம்

இராக்கிலிருந்து ஜோர்டான் மற்றும் செளதி அரேபியாவிக்குள் நுழையும் எல்லையைக் கடக்கும் பகுதியில் ஐ.எஸ் போராளிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இராக் ராணுவ தகவல்கள் கூறுகின்றன.

தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் படைகள் தங்கள் வசமுள்ள குண்டுகள் மற்றும் வெடிப்பொருட்கள் தீர்ந்தே கொண்டே இருப்பதாகவும், படுகொலை நிகழுவதற்கு வாய்ப்பிருப்பதாக அச்சம் தெரிவித்துள்ளதாகவும் மேற்கு மாகாணமான அன்பாரிலிருந்து வந்த ஒரு செய்த் பிபிசிக்கு கிடைத்துள்ளது.

இந்த மோதலில் இதுவரை 10க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .

கடந்த வாரம், இராக்கிலிருந்து ஜோர்டானுக்குள் நுழைய இருக்கும் ஒரே பாதைக்கு அருகே இருந்த எல்லைப்பாதுகாப்பு சோதனைச்சாவடியில் ஐ.எஸ் நடத்திய தற்கொலை தாக்குதலில் 15 பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்