இரானியர்கள் தங்கள் வாழ்க்கையை அனுபவிக்க அனுமதிக்கப்பட வேண்டும் : அதிபர் ரூஹானி கருத்து

இரான் அதிபர் ஹசன் ரூஹானி இந்த ஆண்டு நடைபெறும் மறுதேர்தலில் போட்டியிடுவார் என்பதற்கான அறிகுறிகள் ஆழமாகத் தெரியும் நிலையில், இரானியர்கள் வாழ்க்கையை அனுபவிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிபர் ரூஹானி
படக்குறிப்பு,

இரானியர்கள் தங்கள் வாழ்க்கையை அனுபவிக்க அனுமதிக்கப்பட வேண்டும் : அதிபர் ரூஹானி

இரானிய புத்தாண்டு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இரானியர்கள் அழுவதற்கு பதிலாக சிரிப்பதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தொலைக்காட்சி நேரலையில் ரூஹானி உரையாற்றினார்.

உயர் அந்தஸ்து கொண்ட கடும்போக்குவாதிகளை மறைமுகமாக விமர்சித்த ரூஹானி, தன்னுடைய அரசாங்கம் வெளியுலகிற்கு இரானை திறந்துவிட உறுதுணையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

அதே சமயம், ரூஹானியின் உயர்மட்ட உதவியாளர் ஒருவர் கூறுகையில், ரூஹானி இரண்டாவது முறையாக மே மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்