புதினுக்கு எதிராக போராடிய எதிர்கட்சி ஆர்வலர் விடுதலை

  • 26 பிப்ரவரி 2017

ரஷ்யாவின் பிரபல எதிர்க்கட்சி ஆர்வலரான இல்டார் டாடின் என்பவர், சைபீரியாவின் தென் பகுதியிலுள்ள தொலைதூர சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை DMITRY SEREBRYAKOV/AFP/Getty Images

இந்த வார தொடக்கத்தில் அவருடைய வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அவரது இந்த விடுதலை வந்துள்ளது, .

விடுதலை அடைந்தவுடன் தன்னுடைய மனைவி மற்றும் ஆதரவாளர்களால் வரவேற்கப்பட்ட டாடின், விளாடிமிர் புதினின் பாசிச ஆட்சிக்கு எதிராக தனது போராட்டத்தைத் தொடரப் போவதாக உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை VASILY MAXIMOV/AFP/Getty Images
Image caption சித்ரவதையை நிறுத்தி, டாடினை விடுதலை செய்க என வலியுத்தல்

அதிபர் புதினுக்கு எதிராகவும், அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும் அமைதியான, ஆனால் அனுமதிக்கப்படாத போராட்டங்களை அடிக்கடி நடத்தியதால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதிருப்திகளை தடுக்க 2014 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுள்ள ஒரே நபர் டாடின் என்பது குறிப்பிடத்தக்கது.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்