பிரிட்டன்: தொலைந்த குழந்தைகளின் துன்பியல் விசாரணை

இரண்டாவது உலகப்போருக்குப்பின் பிரிட்டனிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட பல்லாயிரக்கணக்கான சிறார் துஷ்பிரயோகம் குறித்த பிரிட்டிஷ் அரசாங்கம் அமைத்த ஆணையம் தனது விசாரணையை துவக்கியிருக்கிறது.

பிரிட்டன் சிறார் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து விசாரிக்க இரண்டரை ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசு சுயாதீன ஆணையம் ஒன்றை உருவாக்கியது.

அந்த ஆணையம் இன்று (27-02-2017) முதல் தன் பொதுவிசாரணையை துவங்கியுள்ளது.

மொத்தமாக பதின்மூன்று வெவ்வேறு விவகாரங்கள் குறித்து இது விசாரிக்கவுள்ளது.

அதில் முதலாவதாக, இரண்டாம் உலகப்போரையடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் குறித்த விசாரணை இன்று துவங்கியுள்ளது.

பிரிட்டனின் தொலைந்த குழந்தைகள் யார்? அவர்கள் வெளிநாடுகளில் சந்தித்த கொடுமைகள் என்ன? என்பது குறித்த பிபிசியின் செய்தித்தொகுப்பு.