காட்டு முயல்களை அழிக்க ஆஸ்திரேலியாவில் புதிய வைரஸ் அறிமுகம்

ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் பேரழிவுக்கு மிகவும் காரணமாக விளங்கும் காட்டு முயலுக்கு எதிரான புதியதொரு வைரஸ் இந்நாட்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது,

காட்டு முயல்

பட மூலாதாரம், Brendon Thorne/Getty Images

விவசாய பண்ணைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் மில்லியன் கணக்கான டாலர் சேதங்களை விளைவிக்கின்ற இந்த நாட்டில் காணப்படும் காட்டு முயல்களில் ஐந்தில் ஒரு பகுதியை இந்த வைரஸ் அழித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் கொரியாவில் உருவாக்கப்பட்ட இந்த வைரஸ், காட்டு முயல்களின் பல உறுப்புகளில் விரைவாக செயலிழப்பு ஏற்பட காரணமாகிறது.

காட்டு முயல்களை இந்த வைரஸ் விரைவாக கொன்றுவிடும் என்று தெரிவித்திருக்கிற அதிகாரிகள், மனிதரால் மேற்கொள்ளப்படும் பூச்சி கட்டுப்பாட்டு முறைகளில் இதுவும் ஒன்று என்று கூறியுள்ளனர்.

18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பிய குடியேறிகளால் முயல்கள் ஆஸ்திரோலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆஸ்திரோலிய மண்ணின் உயிரினங்கள் பல அழிந்து போவதற்கும் அல்லது குறைந்து போவதற்கும் இந்த முயல்கள் பங்காற்றியுள்ளதாக கருதப்படுகிறது.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்