மொசூல் நகரில் டைக்ரிஸ் ஆற்றுப் பகுதிகளில் இராக் அரசு படை முன்னேற்றம்

மொசூல் நகரில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளோடு நடத்திய போரில் டைக்ரிஸின் ஆற்றின் மீதான பாலம் ஒன்றின் கட்டுப்பாட்டை கைப்பற்றியுள்ளதாக இராக் ராணுவம் தெரிவித்திருக்கிறது.

படையணி

பட மூலாதாரம், AP

மொசூல் நகரத்தின் மேற்கு பகுதியில் கண்டுள்ள இந்த சமீபத்திய முன்னேற்றத்தால் ஜாவ்சாக் பகுதியை சென்றடைந்துள்ளதாக ராணுவம் கூறியிருக்கிறது.

டைக்ரிஸ் ஆற்றின் குறுக்கே இருக்கும் பல பாலங்களில் மிகவும் தெற்கில் இருக்கும் பாலத்தின் இரு முனைகளையும் அரசு படைகள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை இது காட்டுகிறது.

பட மூலாதாரம், Reuters

ஆனால், முந்தைய மோதல்களால் ஆற்றை கடக்கும் பல இடங்கள் மிகவும் சேதமடைந்ததைப் போலவே, இந்தப் பாலமும் சேதமடைந்துள்ளது.

அதேவேளையில், மேற்கு மொசூலிலுள்ள மனிதநேய நிலைமையால் தாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் உதவி பணியாளர்கள் கூறியுள்ளனர்.

சில குடும்பங்கள் உணவு எதுவும் பெற முடியாத நிலையில் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்