ஆஸ்கர் விருது: தவறான திரைப்பட அறிவிப்பிற்கு மன்னிப்பு கோரிய நிறுவனம்

சிறந்த திரைப்படமாக ஆஸ்கர் விருது பெறுவதற்கு தவறுதலாக முதலில் தவறான திரைப்படம் அறிவிக்கப்பட்டதற்கு ஆஸ்கர் விருதின் வாக்குகளை ஆய்வு செய்கின்ற கண்காணிப்பு நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

நடிகர்கள்

பட மூலாதாரம், Getty Images

நிகழ்ச்சி அறிவிப்பாளர்களிடம் தவறான உறை வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்திருக்கும் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம், இது எவ்வாறு நடந்தது என்று புலனாய்வு நடத்தி வருவதாக கூறியுள்ளது.

தொடக்கத்தில் "லாலா லான்ட்" இசை நாடக திரைப்படம் சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் நடைபெற்ற ஏற்புரையின்போது "மூன்லைட்" திரைப்படம் தான் சிறந்த திரைப்படம்என்று தயாரிப்பாளர் ஒருவர் இடையில் கூறினார்.

தாங்கள் தவறுதலாக பெற்றுகொண்ட சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை கருணையுடனும், அன்பாகவும் திரும்பி வழங்கிய "லாலா லான்ட்" திரைப்பட நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு "மூன்லைட்" திரைக்கதைக்கு பொறுப்பான டாரெல் அல்வின் மைக்கிரானே நன்றி தெரிவித்தார்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்