அமெரிக்காவின் பாதுகாப்பு செலவினங்களில் 10 சதவீதம் அதிகரிக்க டிரம்ப் விருப்பம்

அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு செலவினங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி 10 சதவீதம் அதிகரிக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க படையினர்

பட மூலாதாரம், Getty Images

இந்த திட்டத்தின் மூலம் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனுக்கு வழங்கப்படும் நிதி ஆதரவு 54 பில்லியன் டாலராக உயரும்.

வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதி ஆதரவு போன்ற ராணுவம் சாராத திட்டங்களுக்கு அமெரிக்கா வழங்குகின்ற நிதியை குறைத்து, ராணுவத்திற்கு அதிக நிதி ஆதரவு வழங்கப்படுமென தெரிகிறது.

ஆனால், போர்களை தடுப்பதற்கு ராஜதந்திர முயற்சிகள் மற்றும் வளர்ச்சிக்கு நிதி ஆதரவு அளிப்பதே மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தி 120 ராணுவ அதிகாரிகள் குழு ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

பட மூலாதாரம், Scott Nelson/Getty Images

அமெரிக்க வரவு செலவு திட்டத்திலுள்ள பற்றாக்குறையை குறைப்பதற்கு ஆதரவு அளிக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து, அதிபர் டிரம்பின் இந்த பரிந்துரைக்கு எதிர்ப்பு எழும் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் கேட்டு கொண்டதற்கு இணங்க, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரை தோல்வியடை செய்வதற்கான திட்டங்களை பாதுகாப்பு துறை வெள்ளை மாளிகைக்கு சமர்பித்துள்ளது.

காணொளி: இஸ்ரேல்-பாலத்தீன பிரச்சினையை தீர்க்க டிரம்ப் முயற்சி

காணொளிக் குறிப்பு,

இஸ்ரேல்-பாலத்தீன பிரச்சினையை தீர்க்க டிரம்ப் முயற்சி

மேலும் தகவல்களுக்கு:

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்