பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தை குடியேறிகள்: ஐ.நா. எச்சரிக்கை
ஆப்ரிக்காவிலிருந்து லிபியாவின் வழியாக இத்தாலிக்கு ஆபத்தான பயணம் மேற்கொள்ளும், எதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் கடத்தல்காரர்கள் மற்றும் அதிகாரிகளின் வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என ஐ.நா., எச்சரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த வருடம், எந்த துணையுமின்றி சுமார் 26,000 குழந்தைகள் மத்திய தரைக் கடலை கடந்தனர் என்று யுனிசெஃப் நிறுவனம் தெரிவிக்கிறது.
அது, 2015 ஆம் ஆண்டை காட்டிலும் இருமடங்காகும்.
எல்லைகளில், சட்டவிரோத கைது, பாலியல் வன்முறை, ஈவு இரக்கமற்ற துன்புறுத்தல் ஆகியவற்றிற்கு குழந்தைகள் எவ்வாறு ஆளாகின்றனர் என அந்நிறுவனம் விவரித்துள்ளது.
கைது செய்யப்படுவோம் என்ற அச்சம், மேலும் நாடு கடத்தப்படுவது என்ற அச்சத்தில் அவர்கள் அரிதாகவே அதுகுறித்து புகார் தெரிவிக்கின்றனர்.
லிபியாவின் ஆபத்தான தடுப்பு மையங்களில் உணவு, நீர் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லை என தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண :பிபிசி தமிழ் யு டியூப்