அமெரிக்க இந்தியர் கொலை: மனைவியின் அச்சம் நிஜமானதா?
அமெரிக்க இந்தியர் கொலை: மனைவியின் அச்சம் நிஜமானதா?
அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் சென்ற வாரம் கொல்லப்பட்ட இந்திய பொறியியலாளர் ஸ்ரீனிவாஸ் குச்சிபொட்லாவின் சகோதரர், அமெரிக்க வேலையை விட்டுவிட்டு அமெரிக்காவிலிருந்து நிரந்தரமாக இந்தியா திரும்பவேண்டுமென அவரது தாயார் கோரியுள்ளார்.
இவரை கொலை செய்ததாக அமெரிக்க கடற்படையின் முன்னாள் பணியாளரான ஆடம் புரிந்தன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தலின்போதே அமெரிக்காவில் இனவெறுப்பு அதிகரிக்கலாம் என்று தான் அச்சப்பட்டதாக தெரிவித்திருக்கும் ஸ்ரீனிவாசின் மனைவி சுனன்யா துமல, அப்படி நடக்காது என்று தன் கணவர் தனக்கு ஆறுதல் சொன்னதாக நினைவு கூர்ந்தார்.