நாடாளுமன்றத்தில் டிரம்ப்: அமெரிக்க தேசியவாத உணர்வினை புதுப்பிக்கப் போவதாக சூளுரை

  • 1 மார்ச் 2017

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், அமெரிக்க நாடாளுமன்றத்தில் தான் ஆற்றிய முதல் உரையில் நாட்டின் தேசியவாத உணர்வு மற்றும் பெருமையை புதுப்பிக்கப் போவதாக டொனால்ட் டிரம்ப் உறுதியளித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ''அமெரிக்க உணர்வை புதுப்பிப்போம்''

சிறிய விஷயங்கள் குறித்து சிந்தித்த காலம் முடிவடைந்து விட்டது என்று கூறிய டிரம்ப், தங்களின் கனவுகளை செயலாக மாற்றிட அமெரிக்க மக்களுக்கு தைரியம் மட்டும் தான் தேவை என்று மேலும் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து எல்லைகள் வழியாகவும், குற்றச் செயல்கள் மற்றும் போதை பொருட்கள் நாட்டில் பெருகியதை அனுமதித்ததன் மூலம், நீண்ட காலமாகவே நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டு வருவதையும், நாட்டின் உள்கட்டமைப்பு நொறுங்கி வருவதையும் அமெரிக்கர்கள் கண்டு வருகின்றனர் என்று தன் உரையில் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டார்.

உள்கட்டமைப்பு துறையில் 1 ட்ரில்லியன் ( 1 லட்சம் கோடி) டாலர்களை முதலீடு செய்வதற்கு ஒப்புதல் வழங்க, தான் அமெரிக்க நாடாளுமன்றத்தை கேட்டுக் கொள்ளப் போவதாக தனது உரையில் டிரம்ப் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption நாட்டின் தேசியவாத உணர்வினை புதுப்பிக்கப் போவதாக டிரம்ப் சூளுரை

இந்த முதலீட்டின் மூலம், அழியும் நிலையில் உள்ள தொழில்கள் மீண்டும் உயிர் பிழைக்குமென்றும், பல மில்லியன் புதிய வேலை வாய்ப்புகளும் உண்டாகுமென்றும் டிரம்ப் தெரிவித்தார்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண :பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்