நேரலை தொலைக்காட்சி கட்டண சேவை : யூ டியூப்பின் அடுத்த அதிரடி

  • 1 மார்ச் 2017

அமெரிக்காவில் உள்ள கேபிள் சேனல் ஒளிபரப்புத் தொகுப்புக்கு சவால்விடும் வகையில் மாதம் 35 டாலர் என்ற கட்டணத்தில் தொலைக்காட்சி சேவையை யூ டியூப் நிறுவனம் வழங்க உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த நேரலை தொலைக்காட்சியில் 40க்கும் மேற்பட்ட சேனல்கள் இடம்பெற்றிருக்கும்.

ஏ பி சி, சி பி எஸ், ஃபாக்ஸ், என் பி சி மற்றும் இ எஸ் பி என் போன்ற நாட்டின் பெரிய சேனல்களும் இதில் அடங்கும்.

இந்த சேவையில் கிளவுட் டிவிஆர் என்ற அம்சமும் அடங்குகிறது. இதன் மூலம், பயன்பாட்டாளர்கள் நிகழ்ச்சிகளை பதிவு செய்து சேகரித்து வைக்கவும் முடியும்.

பாரம்பரிய கேபிள் நிறுவனங்களுக்கு யூ டியூப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக வல்லுநர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்