மொசூல் : பத்து நாளில் தப்பிய 26,000 பொதுமக்கள்

  • 1 மார்ச் 2017

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக இராக்கில் உள்ள மொசூல் நகரை கைப்பற்றும் நோக்கில் நடைபெற்று வரும் போரில் இதுவரை 26 ஆயிரம் பொதுமக்கள் தப்பியோடியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பத்து நாளில் 26,000 பொதுமக்கள் தப்பியோடியுள்ளனர் : இராக் ராணுவம்

மொசூல் நகரின் மேற்குப்பாதியில் உள்ள ஐ.எஸ் குழுவினரை விரட்டும் முயற்சியில் ராணுவம் தற்போது ஈடுபட்டுள்ளது.

அங்குதான் மோதல் காரணமாக சுமார் ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் சிக்கிக்கொண்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மொசூல் நகரின் மேற்குப்பாதியில் உள்ள ஐ.எஸ் குழுவினரை விரட்டும் முயற்சியில் ராணுவம் தற்போது ஈடுபட்டுள்ளது.

சமீபத்திய முன்னேற்றங்களைத் தொடர்ந்து, மேற்கு புறநகர் பகுதிக்கு கொண்டு செல்லும் இறுதி பெரும் சாலையை கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.

கிழக்கு மொசூலின் சரி பாதியை ராணுவம் முன்னர் கைப்பற்றி கடந்த ஜனவரி மாதம் அப்பகுதியை முழுவதுமாக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்