கிம் ஜோங்-நாம் கொலையில் இரு பெண்கள் மீது கொலை குற்றச்சாட்டு வழக்கு பதிவு

  • 1 மார்ச் 2017

வட கொரிய தலைவரின் ஒன்றுவிட்ட மூத்த சகோதரர் கிம் ஜோங்-நாம் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட இரு பெண்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption வியட்நாமை சேர்ந்த டுவான் தி உவங் மற்றும் இந்தோனீஷியாவை சேர்ந்த சீட்டி அய்ஷ்யா

கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் கிம்மின் முகத்தில் வி எக்ஸ் எனப்படும் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் கொடியை விஷமான வி எக்ஸ் ரசாயனத்தை அவருடைய முகத்தில் வியட்நாமை சேர்ந்த டுவான் தி உவங் மற்றும் இந்தோனீஷியாவை சேர்ந்த சீட்டி அய்ஷ்யா பூசியதாக சந்தேகிக்கப்படுகின்றனர்.

சிறப்புப் படையினர் பாதுகாப்புடன் மலேசிய தலைநகர் அருகே இருந்த நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கொலைக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு மரணத் தண்டனை விதிக்கப்படலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்