ஃபிரான்ஸ் : முறைகேடு வழக்கு ஒன்றில் அதிபர் வேட்பாளருக்கு நீதிமன்றம் சம்மன்

  • 1 மார்ச் 2017

ஃபிரான்ஸில் உள்ள மத்திய வலதுசாரி அதிபர் வேட்பாளரான ஃபிரான்சுவா ஃபில்லோன் மீது நீதிபதி ஒருவர் அதிகாரப்பூர்வ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை எதிர்த்து தான் போராடப்போவதாக ஃபில்லோன் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஃபிரான்ஸில் உள்ள மத்திய வலதுசாரி அதிபர் வேட்பாளரான ஃபிரான்சுவா ஃபில்லோன் மீது நீதிபதி ஒருவர் அதிகாரப்பூர்வ விசாரணைக்கு உத்தரவு

பல வாரங்களாக, ஃபில்லோன் மனைவி தான் மேற்கொள்ளாத பணிகளுக்காக பல ஆண்டுகளாக பணம் வழங்கப்பட்டு வந்த குற்றச்சாட்டை எதிர்த்து ஃபில்லோன் போராடி வந்தார்.

மார்ச் 15 ஆம் தேதி, நீதிபதி சேர்ஜ் டூநேய்ர் முன்னிலையில் ஆஜராகும்படி அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது ஓர் அரசியல் படுகொலை என்று ஃபில்லோன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அழைப்பாணையை தான் மதிப்பதாகவும், நீதிபதிகளிடம் உண்மையை சொல்வேன் என்றும் ஃபில்லோன் கருத்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்