இந்தோனேஷியப்பெண்: கொலைக்குற்றவாளியா? பாதிக்கப்பட்டவரா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தோனேஷியப்பெண்: கொலைக்குற்றவாளியா? பாதிக்கப்பட்டவரா?

  • 1 மார்ச் 2017

வடகொரியத்தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங் உன்னின் கொலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இரு பெண்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தூக்குதண்டனையை எதிர்கொள்ள நேரும்.

இந்த பெண்களில் ஒருவர் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர் மற்றவர் வியட்நாமைச் சேர்ந்தவர்.

குண்டுதுளைக்காத வாகனங்களில் இவர்கள் இருவரும் இன்று (01-03-2017) நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.

இவர்களில் ஒருவரான சிதி ஆயிஷா தான் குற்றமற்றவர் என்கிறார். இந்தோனேஷியாவிலுள்ள குடியேறிகளின் உரிமைகளுக்கான செயற்பட்டாளர்களும் இவர் பாதிக்கப்பட்டவரே தவிர, குற்றவாளியல்ல என்கின்றனர்.