ரஷ்ய தூதரை சந்திக்கவில்லை என்கிறார் டிரம்பின் அட்டார்னி ஜெனரல்; சந்தித்தார் என்கிறது நீதித்துறை

  • 2 மார்ச் 2017

"ரஷிய அதிகாரிகளிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை" என அமெரிக்க அட்டார்னி ஜெனிரல் ஜெஃப் செஷன்ஸ் உறுதியளித்த போதிலும், தேர்தலின் போது ரஷிய தூதரை அவர் சந்தித்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

செனட் ஆயுத சேவை கமிட்டியில் ஜெஃப் வகித்த பதவி காரணமாக கடந்த வருடம் ஜூலை மற்றும் செப்டம்பரில் ரஷ்ய தூதர் செர்கை கிஸ்லியாக்கை சந்தித்தார் என நீதித்துறை தெரிவித்துள்ளது.

"எந்த நேரத்திலும் எந்தவித தேர்தல் பிரசாரம் குறித்தும் ஆலோசிக்க ரஷிய அதிகாரிகளை சந்திக்கவில்லை" என வியாழனன்று ஜெஃப் செஷன்ஸ் தெரிவித்தார்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக கூறப்பட்டது அதிபர் டிரம்பிற்கு நெருக்கடியான சூழலை உருவாக்கியுள்ளது

ஜனநாயகக் கட்சியின் கணிணிகளை ரஷியா சட்டவிரோதமாக ஊடுறுவியது எனக் கூறப்படும் குற்றச்சாட்டு, அதிபர் தேர்தலில் ஹிலரியை தோற்கடித்து டிரம்பை வெற்றிப் பெறச் செய்வதற்குதான் என்று அமெரிக்க உளவுத்துறை நம்புகிறது.

ரஷியாவிற்கு எதிரான தடைகள் குறித்து கிஸ்லியாக்கிடம் பேசியது குறித்த தவறான தகவலை வெள்ளை மாளிகைக்கு அளித்தார் என்ற குற்றச்சாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மிச்செல் ஃபிலின் கடந்த மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்