ஜிம்பாப்வேயில் பள்ளி மற்றும் வீடுகளில் குழந்தைகளை அடிக்க உயர்நீதிமன்றம் தடை

  • 2 மார்ச் 2017

ஜிம்பாப்வேயில் பள்ளிகளிலும், வீடுகளிலும் குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவதற்கு சட்டப்படி தடை விதித்து அந்நாட்டின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

முதல் கிரேடில் படிக்கும் தங்களது 6 வயது மகளை ஆசிரியர் ஒருவர் அடித்தததை தொடர்ந்து ஆழமான காயங்கள் ஏற்பட்டதாக குழந்தையின் பெற்றோர் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வெளிவந்துள்ளது.

தங்களுடைய மகள் வீட்டுப்பாடத்தை முடித்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பெறப்படும் பாதுகாவலரின் கையெழுத்தை வாங்கவில்லை என்பதற்காக தண்டிக்கப்பட்டுள்ளதாக லினா ஃபுங்வா தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் இந்த தண்டனையை அரசியலமைப்பு நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்