கட்டாய ராணுவ சேவையை மீண்டும் அமல்படுத்தும் ஸ்வீடன் அரசாங்கம்

  • 2 மார்ச் 2017

ரஷ்யா தரப்பிலிருந்து உணரப்படும் அச்சுறுத்தல்கள் உள்பட உலகளாவிய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் கட்டாய ராணுவ சேவையை மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளதாக ஸ்வீடன் அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் கட்டாய ராணுவ சேவையை மீண்டும் அறிமுகம்

பாதுகாப்பு சூழ்நிலைகள் மாறியுள்ளதால் ஸ்வீடன் ராணுவம் அதன் திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் ஹல்கிவிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டில் கட்டாய ராணுவ சேவையை ஸ்வீடன் முடிவுக்கு கொண்டுவந்தது .

ஆனால், மூன்றாண்டுகளுக்குமுன் கிரைமியாவை ரஷ்யா இணைத்துக் கொண்டதை தொடர்ந்து பால்டிக் பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

1999 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த ஆண் பெண் இருவரும் ராணுவத்தில் சேரும்படி மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனினும், சிறிய அளவிலான எண்ணிக்கையிலே ராணுவத்தில் பணியாற்ற தேர்தெடுக்கப்படுவார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்