மேற்கு மொசூலில் ஐ.எஸ் தீவிரவாதிகள், அரசு படைகளுக்கு இடையேயான போர் தீவிரம்

  • 2 மார்ச் 2017

இராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் தீவிரம் அடைந்துவரும் நிலையில், அவர்களது இறுதி பெரிய நகர்ப்புற கோட்டையாக கருதப்படும் மொசூலின் மேற்கு பாதியில் நிகழ்ந்த வான்வழித்தாக்குதலில் மசூதி ஒன்று சேதமடைந்துள்ளதாகவும், பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

மேற்கு மொசூலில் தரைப்படைகள் கடுமையான எதிர்ப்பை சந்தித்துவரும் நிலையில், ஐ.எஸ் நிலைகள் மீது இராக் மற்றும் அமெரிக்கா தலைமையிலான விமானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

நேற்று இரவு கடும் புயல் வீசிக்கொண்டிருந்த சமயத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் எதிர் தாக்குதல் ஒன்றை தொடுத்தனர்.

அதிகாலை நேரத்திலும் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிச் சத்தங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்