டிரம்புக்கு தொடரும் தலைவலி - காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டிரம்புக்கு தொடரும் தலைவலி - காணொளி

  • 2 மார்ச் 2017

அமெரிக்காவின் கடந்த தேர்தல் பிரச்சார காலத்தில் ரஷ்ய அதிபருடன் வெளியில் தெரிவிக்காத இரு சந்திப்புக்களை மேற்கொண்டதாக தெரியவந்ததை அடுத்து, அதிபர் டிரம்பினால் அமெரிக்க அட்டேர்னி ஜெனரலாக புதிதாக நியமிக்கப்பட்ட ஜெஃப் செஸன்ஸின் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

அதிபர் தேர்தல் பிரச்சாரம் குறித்து விவாதிக்க தான் எந்த ரஷ்ய அதிகாரியையும் சந்திக்கவில்லை என்று அவர் மறுத்துள்ளார்.

நாட்டின் தலைமை சட்ட அமலாக்க அதிகாரி என்ற வகையில் செஸன்ஸின் கீழ் வரும் FBI நிறுவனம் ரஷ்ய தலையீடு குறித்த குற்றச்சாட்டை விசாரிக்க உள்ளது.

இவை குறித்து ஆராயும் பிபிசியின் காணொளி.