ஆளில்லாத்தீவுக்கு அனுப்பப்படும் ரோஹிஞ்சா அகதிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆளில்லாத்தீவுக்கு அனுப்பப்படும் ரோஹிஞ்சா அகதிகள்

  • 2 மார்ச் 2017

அக்டோபர் மாதம் முதல் இதுவரை சுமார் எழுபதாயிரம் ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் மியன்மாரிலிருந்து வங்கதேசம் வந்துள்ளனர்.

மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் தொடரும் தமக்கு எதிரான ஒடுக்குமுறைகளில் இருந்து தப்பவே இப்படி வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

அவர்களில் சிலரை தெங்கர் சார் என்னும் ஆள்நடமாட்டமற்ற தொலைதூர தீவில் குடியேற்ற வங்கதேச அரசு திட்டமிடுகிறது.

ஆனால் அது குறித்து மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன. அந்த தீவின் நிலைமையை நேரில் சென்று பார்த்தது பிபிசி