மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சீர்த்திருத்தம் ஒன்றுக்கு பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல்

  • 2 மார்ச் 2017

பாகிஸ்தானில் உள்ள பழங்குடியினர் வாழும் பகுதிகள் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சீர்த்திருத்தங்களுக்கு அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஆஃப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பழங்குடி பகுதிகள் நீண்ட காலமாக தன்னாட்சி பெற்ற பகுதிகளாக விளங்கி வந்தன.

பழங்குடியின பழக்க வழக்கங்கள்படி சுய சட்டத்திட்டம் மற்றும் அரசியல் அமைப்புமுறைகளை அப்பகுதியில் வாழும் மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

தற்போது புதிய திட்டங்களின்படி, பழங்குடியின பகுதிகள் பொதுத் தேர்தல்களில் பங்கேற்பது மட்டுமின்றி பாகிஸ்தானின் சட்டத்திட்டங்களின் கீழ் ஆட்சி நடத்தப்படும்.

தீவிரவாதிகளை சமாளிக்கவும், சட்டவிரோத போதை மருந்து மற்றும் துப்பாக்கி கலாசார நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் இந்த மாற்றங்கள் பாகிஸ்தானுக்கு உதவியாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்