ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்கும் அமெரிக்கர்களுக்கு விசாவை கட்டாயமாக்க முயற்சி

  • 2 மார்ச் 2017

ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும் அமெரிக்க பிரஜைகள், விசா பெற வேண்டிய நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஐரோப்பிய ஆணையம், இரண்டு மாதங்களில் இந்த நடவடிக்கையை அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளாகிய பல்கேரியா, க்ரோஷியா, சிப்ரஸ், போலந்து மற்றும் ரூமானியா ஆகிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய விசா தேவை; ஆனால் அமெரிக்க குடிமக்கள் விசா இல்லாமல் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் ஆனையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பரஸ்பர விசா ஏற்பாடுகளால் சில உறுப்பு நாடுகள் பயன் அடையவில்லை என்று தெரியவந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த கோரிக்கை விடப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்