ரஷ்ய தலையீடு விசாரணையிலிருந்து விலகினார் அமெரிக்க அட்டார்னி ஜெனரல்

  • 3 மார்ச் 2017

அமெரிக்க அட்டார்னி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸ், 2016-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறைகளில் ரஷ்ய தலையீடு இருந்ததா என்பது குறித்த விசாரணையில் இருந்து, தானாகவே விலகியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜெஃப் செஷன்ஸ்

அதே நேரத்தில், ரஷ்ய தூதரை கடந்த ஆண்டு இரண்டு முறை சந்தித்து தொடர்பாக செனட் விசாரணையின்போது தெரிவிக்காததால், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று வாஷிங்டனில் செய்திாயளர்களிடம் செஷன்ஸ் தெரிவித்தார்.

ரஷ்ய தூதருடனான ஆலோசனை, தேர்தல் தொடர்பானது அல்ல என்று அவர் கூறினார்.

பொய் வாக்குமூலம் அளித்ததாக அவர் மீது குற்றம் சாட்டும் ஜனாயக் கட்சியினர், அவர் பதவி விலக வேண்டும் என்றும், விசாரணைக் குழுவிலிருந்து விலகியது போதுமானதல்ல என்றும் குறிப்பிடுகின்றனர்.

அதே நேரத்தில், அவர்கள் பழி வாங்கத் துடிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த மாதம், ரஷ்ய தூதருடன் தான் நடத்தி சந்திப்புக் குறித்து, தவறான தகவல்களை அளித்ததாக, குற்றச்சாட்டுக்கு ஆளான டிம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃபிளின் நிர்பந்தத்தின் பேரில் பதவியை ராஜிநாமா செய்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்