சுண்டெலிகளின் ஸ்டெம் செல்களை கொண்டு செயற்கை கரு முட்டைகள் : பிரிட்டன் விஞ்ஞானிகள் சாதனை

  • 3 மார்ச் 2017

உலகிலேயே முதன்முறையாக சுண்டெலிகளின் இரு வகையான ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி செயற்கை கரு முட்டைகளை பிரிட்டன் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Sandy Huffaker
Image caption கோப்புப்படம்

தாங்கள் கண்டுபிடித்த செயற்கை கரு முட்டையானது ஆரோக்கியமான கருவாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும், அதற்கு ஸ்டெம் செல்லின் மூன்றாவது வடிவம் தேவை என்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மஞ்சள் கரு பைக்குள் வளரும் இந்த ஸ்டெம் செல்லின் மூன்றாவது வடிவம் தான் ஆரோக்கியத்தை வழங்கும்.

தற்போது, இதே நுட்பத்தை பயன்படுத்தி செயற்கை மனித கருக்களை உருவாக்கும் முயற்சிகளில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கரு உருவாக்க சிகிச்சைகளை மேம்படுத்தும் நம்பிக்கையில் இந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மனித கரு பரிசோதனைகளுக்கு பிரிட்டன் விதித்திருக்கும் 14 நாள் சட்ட வரம்பானது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்