கடும் விமர்சனத்துக்கு உள்ளாகும் அட்டார்னி ஜெனரலுக்கு டிரம்ப் ஆதரவு

  • 3 மார்ச் 2017

அட்டார்னி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸை "நேர்மையான மனிதர்" என்று புகழ்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Chip Somodevilla/Getty Images

ரஷ்ய தூதரோடு வைத்திருந்த தொடர்புகள் பற்றிய விசாரணையில், செஷன்ஸ் பொய் வாக்குமூலம் அளித்ததாக ஜனநாயக கட்சியினர் அவர் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.

ரஷ்ய தூதரை சந்தித்த சர்ச்சையில் அட்டார்னி ஜெனரல்: டிரம்புக்கு மேலும் நெருக்கடி

செஷன்ஸ் தன்னுடைய பதிலை இன்னும் துல்லியமாக வழங்கியிருக்கலாம் என்று தெரிவித்திருக்கும் டிரம்ப், இது வேண்டுமென்று நடைபெற்றதில்லை என்று கூறியிருக்கிறார்.

ஐரோப்பா செல்லும் அமெரிக்கர்களுக்கு விசாவை கட்டாயமாக்க முயற்சி

ஜனநாயக கட்சியினர் சந்தேகத்தின் அடிப்படையில் இதனை வெளிப்படுத்தியிருப்பதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption மைக் ஃபிளின் பதவியில் இருந்து விலகியதற்கு ரஷ்ய தூதர் செர்கெ கிஸ்ல்யாக் முக்கிய நபராக இருந்தார்

இருப்பினும், 2016-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறைகளில் ரஷ்ய தலையீடு குறித்த மத்திய புலனாய்வு துறையின் விசாரணையில் இருந்து, செஷன்ஸ் தானாகவே விலகியிருக்கிறார்.

2016 ஆம் ஆண்டு ரஷ்ய தூதேராடு செஷன்ஸ் வைத்திருந்த தொடர்புகள் பற்றிய விளக்கங்கள் "நம்பக்கூடியதாக இல்லை" என்று கூறி ஜனநாயக கட்சியினர் செஷன்ஸ் மீது தாக்குதலை தொடர்ந்து வருகின்றனர்.

செஷன்ஸ் பதவி விலக வேண்டும் என்று பிரதிநிதிகள் அவையின் ஜனநாயக கட்சியின் தலைவர் நான்ஸி பெலோசி கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஜனநாயக கட்சியினர் தேர்தலில் தோல்வியடைந்து விட்டனர். இப்போது அவர்கள் நடைமுறையின் கட்டுப்பாட்டையும் இழந்து விட்டனர் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

டிரம்பின் அணியினர் ரஷ்ய அதிகாரிகளை சந்தித்ததாகவும், டிரம்புக்கு சார்பாக ரஷ்யா அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டது என்றும் டிரம்பின் தேர்தல் பரப்புரையின்போது குற்றச்சாட்டுகள் தொடர்ந்தன.

இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் "போலி செய்திகள்" என்று டிரம்ப் முத்திரை குத்தியுள்ளார்.

காணொளி: டிரம்புக்கு தொடரும் தலைவலி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
டிரம்புக்கு தொடரும் தலைவலி - காணொளி

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண :பிபிசி தமிழ் யு டியூப்