மொசூல் நகரில் ரசாயன ஆயுத தாக்குதல் அறிகுறியுடன் 7 பேர்

மொசூல் நகருக்கு அருகிலுள்ள ஒரு மருத்துவமனையில் ரசாயன ஆயுதங்களால் தாக்குதலுக்குள்ளான அறிகுறிகளை கொண்ட 5 குழந்தைகளுக்கும் 2 பெண்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

இந்த நகரத்தில் இருந்து இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரை வெளியேற்றிவிட இராக் அரசு படைப்பிரிவுகள் முயன்று வருகின்றன.

ரசாயன தாக்குதலால் 7 பேருக்கு கொப்புளங்கள் ஏற்பட்டிருப்பது தெரிய வருவதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இயக்குநர் இராபர்ட் மர்டினி கூறியுள்ளார்.

ஆனால், இதற்கு யார் மீது குற்றம் சாட்டுவது என்று அவர் குறிப்பிடவில்லை.

படத்தின் காப்புரிமை Reuters

சர்வதேச சட்டப்படி ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று கூறி, இந்த தாக்குதலை அவர் கண்டித்திருக்கிறார்.

இராக்கில் நடைபெற்று வரும் தற்போதைய மோதல்களில், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மீட்புதவி நிறுவனம் ஒன்று தெரிவித்திருப்பது இதுவே முதல்முறை என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண :பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்