பிரான்ஸ் அதிபர் தேர்தல்: பியோங் செய்தி தொடர்பாளர் பதவி விலகல்

பிரான்ஸ் அதிபர் தேர்தலில், முக்கிய மத்திய வலதுசாரி கட்சியின் வேட்பாளரான பிரான்சுவா ஃபியோங் மீது போலி வேலை குற்றச்சாட்டுகள் தொடருகின்ற நிலையில் செய்தி தொடர்பாளரும் ராஜினாமா செய்திருப்பது அவருக்கு பெரும் அடியாக வந்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் இருந்து விலக இதுவரை எண்ணமில்லை - ஃபியோங்

தன்னுடைய டுவிட்டர் பதிவில் பதவி விலகல் செய்தியை அறிவித்திருக்கும் தியேரீ சோலெர், குறிப்பிட்ட காரணம் எதையும் வழங்கவில்லை.

செய்யாத நாடாளுமன்ற வேலைகளுக்காக, தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு ஊதியம் வழங்கினார் என்ற தகவல்கள் வெளிவந்த பிறகு, ஃபியோங் அதிபர் தேர்தல் களத்தில் இருந்து விலக வேண்டும் என்று அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.

எந்த குற்றத்தையும் செய்யவில்லை என்று குடும்பத்தினர் மறுத்துள்ள நிலையில், தொடர்ந்து போராட போவதாக ஃபியோங் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பியோங் இந்த போட்டியில் இருந்து விலகினால், முன்னாள் பிரதமரான யுப்பே அதிபர் தேர்தல் களத்தில் இறங்குவார்

அதிபர் வேட்பாளர் தொடக்க தேர்தலில் ஃபியோங்கை தோல்வியடைய செய்த அலென் யுப்பே, ஃபியோங்கிற்கு பதிலாக பேட்டியிடும் வேட்பாளராக பார்க்கப்படுகிறார்.

ஃபியோங் இந்த போட்டியில் இருந்து விலகினால், முன்னாள் பிரதமரான யுப்பே அதிபர் தேர்தல் களத்தில் இறங்குவார் என்று யுப்பேயின் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண :பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்