ஏமனில் அல் கயீதா மீது அமெரிக்க தாக்குதல் அதிகரிப்பு

ஏமனில் அல் கயீதா மீது இரண்டாவது நாளாக வான்வழி தாக்குதல்கள் நடத்தி, அமெரிக்கா தாக்குதல்களை அதிகரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

தரைப் படைப்பிரிவுகள் போரில் ஈடுபட்டிருக்கின்றன என்ற உள்ளூர் தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

ஏமனின் தெற்கு பகுதியலுள்ள ஷாப்வா மாகாணத்திலுள்ள ஒரு கிராமத்தில் அல் கயீதா தலைவர்களுக்கு சொந்தமானதாக நம்பப்படும் வீடுகள் மீது சமீபத்திய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பழங்குடியின மக்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல் கயீதா தீவிரவாதிகள் தங்கியிருப்பதாக நம்பப்படுகின்ற மலைப்பாங்கான பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருக்கும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன், வியாழக்கிழமை 20 தாக்குதல்களுக்கு மேலாக நடத்தப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளது.

ஏமனின் முந்தைய நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட நீண்டகால அல் கயீதாவுக்கு எதிர்ப்பு நடவடிக்கை இந்த தாக்குதலால் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண :பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்