ஐக்கிய ராஜ்ஜியத்தில் திரும்பப் பெறப்படும் 75 ஆயிரம் பென்ஸ் கார்கள்

  • 4 மார்ச் 2017

ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள மெர்ஸிடிஸ்-பென்ஸ் கார்கள் தீப்பிடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சுமார் 75 ஆயிரம் கார்களை திரும்பப் பெறுவதாக டாய்ம்லெர் நிறுவனம் அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Scott Olson

51 தீப்பிடிப்பு சம்பவங்கள் புகார் கூறப்பட்டதை தொடர்ந்து உலகளவில் சுமார் ஒரு மில்லியன் கார்களை அந்நிறுவனம் திரும்பப் பெறுகிறது.

இந்த 75 ஆயிரம் கார்களும் அதில் ஓர் அங்கமாக இருக்கும்.

ஆனால், இதுவரை தீப்பிடிப்பு சம்பவங்களால் உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை PATRICK KOVARIK

மெர்ஸிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தில் ஏ,பி,சி மற்றும் இ-கிளாஸ் கார்கள் மற்றும் அதன் சி எல் ஏ, ஜி எல் ஏ மற்றும் ஜி எல் சி வாகனங்களில் உள்ள ஃபுயூஸ்களை கோளாறு பாதிப்பதாகவும், சில தனிப்பட்ட சூழலில் ஃபுயூஸ்கள் அதிக சூடாவதாகவும் டாய்ம்லெர் தெரிவித்துள்ளது.

காரை ஓட்ட ஸ்டார்ட் செய்யும் போது இதுப்போன்ற பிரச்சனை ஏற்படுவதாக ஜெர்மன் கார் உற்பத்தி நிறுவனமான பென்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்