ஓலெத் துப்பாக்கிச்சூடு : இந்தியர்களை காப்பாற்ற முயன்ற அமெரிக்கருக்கு இந்தியா வர அழைப்பு

  • 4 மார்ச் 2017

அமெரிக்காவின் கான்ஸாஸில் உள்ள மதுவிடுதி ஒன்றில் இரு இந்தியர்கள் மீது நடந்த கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் தலையிட முயன்று துப்பாக்கிக் குண்டுகளால் காயம்பட்ட அமெரிக்கரை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

Image caption கையில் கட்டுகளுடன் இயன் கிரில்லோட்

24 வயதாகும் இயன் கிரில்லோட் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்பட பல இந்தியர்களால் பரவலாக புகழப்பட்டு வருகிறார்.

கடந்த வியாழனன்று இந்திய தூதுவர்கள் கிரில்லாட்டை சந்தித்து உடல் குணமடைந்தவுடன் இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக கான்ஸாஸ் மருத்துவமனையின் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

''நாங்கள் உங்களுடன் எப்போதும் துணை நிற்போம்'' என்று ஹூஸ்டனை சார்ந்த இந்திய தூதரக அதிகாரியான அனுப்பம் ராய் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் இருந்து கடந்த செவ்வாய்க் கிழமையன்று வீடு திரும்பிய கிரில்லோட், முன்னர் இந்த வார தொடக்கத்தில், தான் இந்தியாவை சுவாரஸ்யத்துடனே பார்த்து வந்ததாக கருத்து தெரிவித்திருந்தார்.

''நான் இந்தியா செல்வதற்கு ஒரு நல்ல காரணம் கிடைத்துவிட்டதாக நினைக்கிறேன்'' என்று இந்திய நாளிதழ் ஒன்றுக்கு கிரில்லோட் பேட்டியளித்துள்ளார்.

பிப்ரவரி 22 ஆம் தேதி ஓலெத்தில் உள்ள ஆஸ்டின்ஸ் பார் ஆண்ட் கிரில் என்ற மதுவிடுதியில் துப்பாக்கித்தாரி என சந்தேகிக்கப்பட்ட ஆடம் பியூரின்டன் என்பவர், ''நாட்டைவிட்டு வெளியேறு'' என்ற கத்தியவாறு, ஸ்ரீனிவாஸ் குச்சிபூட்லா மற்றும் அலோக் மாடாசானி என்ற இரு இந்திய பொறியியலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். அந்நேரத்தில் கிரில்லோட் சம்பவ இடத்தில் இருந்தார்.

இந்த தாக்குதலில் குச்சிபூட்லா பலியான நிலையில், மாடசானி படுகாயம் அடைந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்