கிம் ஜோங் நாம் கொலை விசாரணையில் மலேசிய அதிகாரிகள் கூட்டுச்சதி : வட கொரியா சந்தேக நபர் குற்றச்சாட்டு

  • 4 மார்ச் 2017

வட கொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜோங்-நாம் மரணம் தொடர்பில் விசாரிக்கப்பட்ட வட கொரியாவை சேர்ந்த சந்தேக நபர், மலேசிய அதிகாரிகளின் கூட்டுச்சதியால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption இன்று அதிகாலை பெய்ஜிங் வந்தடைந்தார் ரி ஜோங் சூல்

தான் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டது வட கொரியாவின் மரியாதையை சீர்குலைக்க போடப்பட்ட திட்டம் என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு ரி ஜோங் சூல் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர் பெய்ஜிங்கில் உள்ள வட கொரிய தூதரகத்துக்கு வெளியே இந்த கருத்துக்களை அவர் தெரிவித்தார்.

போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் போலீஸ் காவலிலிருந்து ரி ஜோங் சூல் விடுவிக்கப்பட்டார்.

இன்று அதிகாலை செய்தியாளர்களிடம் பேசிய ரி ஜோங் சூல், மலேசிய விசாரணை அதிகாரிகள் தன்னை கட்டாயப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற முயற்சித்ததாக குற்றஞ்சாட்டினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்