அமெரிக்காவுக்கு போட்டியாக ராணுவ செலவினங்களை அதிகரித்த சீனா

  • 4 மார்ச் 2017

அமெரிக்காவின் பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்கும் வரைவுத்திட்டம் குறித்து டொனால்ட் டிரம்ப் சில தினங்களுக்குமுன் அறிவித்திருந்த நிலையில், இந்த ஆண்டு சீனா ராணுவத்துக்கான செலவினங்களை 7 சதவிகிதம் அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption சீனாவில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட இந்த அதிகரிப்பு தேவை என அரசு கருதுகிறது

பெய்ஜிங்கில் ஆண்டுதோறும் நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சமீப ஆண்டுகள் சீனாவின் பொருளாதாரம் விரிவடைந்துவரும் நிலையில், அதன் ஆயுதப்

படைகளை வேகமாக நவீனமாக்கி வருகிறது.

எனினும், நாட்டின் பாதுகாப்பு பட்ஜெட் என்பது அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது குறைவானதாகவே இருக்கிறது.

கடந்த இரு தசாப்தங்களாக சீனா அதன் பாதுகாப்புத்துறையில் செய்யும் முதலீடு இரு இலக்க சதவிகிதத்தை இன்னும் தொடவில்லை அதாவது 10 சதவிகிதத்திற்கு மேல் சென்றதில்லை என்பதை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குறிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

2017-ம் ஆண்டு நாட்டின் உத்தேச மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ராணுவத்திற்கு செய்யப்படும் மொத்த செலவானது 1.3% ஆக இருக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்