பயணிப்போரின் தகவல்களை சேகரிக்கும் மென்பொருள்: அம்பலமானது ஊபரின் ரகசிய திட்டம்

உலக அளவில் பல நகரங்களில் நடைபெறுகின்ற வாடகை கார் சேவைகள் ரகசிய ஒழுங்காற்றுநர்களால் சோதிக்கப்பட்டு, மூடப்படுவதில் இருந்து தடுக்கும் வகையில் ரகசிய திட்டம் ஒன்றை ஊபர் வாடகை கார் நிறுவனம் பயன்படுத்தி வந்துள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

சேவை நிபந்தனைகளில் ஏதாவது மீறல்கள் நடைபெற்றால், உபேர் நிறுவனத்தை பாதுகாத்துக் கொள்ள உதவுவதற்கு கிரேபால் என்ற மென்பொருள் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், ஊபர் வாடகை கார் நிறுவனத்தின் செல்பேசி செயலி வழியாக சேகரிக்கப்பட்ட தரவுகள், இந்த நிறுவனத்தின் கார் ஓட்டுநர்களை அதிகாரிகள் கண்காணித்து இணம் காணவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பல நாடுகளில் கிரேபால் செயலி பயன்படுத்தப்படுவதை ஊபர் வாடகை கார் நிறுவனம் ஒப்புகொண்டுள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஊபர் வாடகை கார் சேவையை பயன்படுத்தி கொள்வோரின் நடத்தைகளை பற்றி இந்த நிறுவனம் கண்காணிக்க இந்த கருவி உதவியுள்ளது.

படத்தின் காப்புரிமை Oli Scarff/Getty Images

ஆனால், சாதாரண பயணிகளை போல சென்று புலனாய்வு மேற்கொள்ளும் ஒழுங்காற்றுநர்களை இனம் காண்பதன் மூலம், வாடகை கார்களை நிர்வகிக்கும் உள்ளூர் சட்ட திட்டங்களை ஊபர் மதிக்காமல் இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.

புவியிடத் தரவுகள், கடன் பண அட்டை தகவல்கள் ஆகியவற்றை சேகரித்து, ஊபர் வாடகை கார் சேவையை பயன்படுத்துகிற ஒருவர், ஏதாவது நிறுவனத்தை அல்லது சட்ட அமலாக்க துறையோடு தொடர்புடையவரா என்று முடிவு செய்து கொள்ளும் வகையில் இந்த மென்பொருள் வேலை செய்கிறது.

வாடகை கார் சேவை பதிவை ரத்து செய்யவே, ஊபர் சேவை ஓட்டுநர்களை அழைக்க முயல்வதாக சந்தேகப்படுகின்ற தனிநபர்களை அறிந்துகொள்ள இந்த செயலியின் போலி பதிப்பு ஒன்று அனுமதிக்கிறது.

கிரேபால் திட்டம் தற்போது செயல்படுத்தப்படுவதாக வெள்ளிக்கிழமை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான தகவல்களை தற்போதைய மற்றும் முன்னாள் ஊபர் பணியாளர்கள் நான்கு பேர் வழங்கியுள்ளதாக அதில் குறிப்பிடப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Oli Scarff/Getty images

"எங்களுடைய பணி நிபந்தனைகளை மீறுகின்ற, ஏமாற்றுவதற்கு கார் சேவை வழங்க அழைப்பு விடுக்கும் வேண்டுகோளை மறுத்துவிட இந்த திட்டம் உதவுகிறது" என்று ஊபர் கார் வாடகை நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதில் பயணம் மேற்கொள்வோர், ஓட்டுநர்களை தாக்குபவரா, எங்களுடைய செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் போட்டியாளரா அல்லது ஓட்டுநர்களை சிக்க வைக்க ரகசிய அதிரடி நடவடிக்கைகள் மூலம் அதிகாரிகளோடு மோதுபவரா என்பதை அறியும் நோக்கில் இது உதவுவதாக கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் ஓட்டுநர்களில் ஒருவரோடு சவால்விட்ட காணொளி வெளிவந்துள்ளதற்கு,ஊபர் வாடகை கார் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி டிராவிஸ் கலாநிக் மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தப்பட்ட அதே வாரத்தில் இந்த விவரங்களும் வெளிவந்துள்ளன.

இந்த நிறுவனத்தில் காணப்படும் வெறுக்கதக்க பாலுணர்வுக்காக இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் அவர் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்