தனது அலுவலக தொலைபேசிகளை ஒபாமா நிர்வாகம் ஒட்டுக்கேட்டதாக டிரம்ப் குற்றச்சாட்டு

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, தான் வெற்றி பெறுவதற்கு முன்னதாக, நியூ யார்க்கிலுள்ள டிரம்ப் டவரில் இருக்கும் தனது அலுவலகங்களின் தொலைபேசிகளை ஒபாமா நிர்வாகம் ஒட்டுக்கேட்டதாக அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AP

இது தொடர்பாக டிரம்ப் தொடர்ந்து வெளியிட்டுள்ள பல டுவிட்டர் பதிவுகளில் எந்தவொரு சான்றையும் வழங்கவில்லை.

ஆனால், தொலைபேசியில் பேசிய விடயங்களை பதிவு செய்திருப்பதை கொடிய செயல் என்று விவரித்திரிருக்கும் டிரம்ப், இந்த செயல்பாட்டை 1970 ஆம் ஆண்டு அதிபர் நிக்ஸன் ஈடுபட்ட வாட்டர்கேட் மோசடியோடு ஒப்பிட்டுள்ளார்.

அதிபர் டிரம்ப் எதனை குறிப்பிடுகிறார் என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தல் பரப்புரையின்போது அலுவலக தொலைபேசிகள் ஒட்டுகேட்கப்பட்டிருக்கலாம் என்று டிரம்ப் டவர் ஊழியர்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

படத்தின் காப்புரிமை Reuters

அதிகாலை டுவிட்டரில் ரஷ்ய தூதரோடு தேர்தலுக்கு முந்தைய தொடர்புகள் பற்றிய கேள்வி கணைகளை சந்தித்து வருகின்ற அமெரிக்க அட்டார்னி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸை, டிரம்ப் மீண்டும் நியாயப்படுத்தி எழுதியுள்ளார்.

முதல் சந்திப்பு ஒபாமா நிர்வாகத்தால்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அதிபர் டிரம்ப் டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்