லிபியா: இரு எண்ணெய் முனையங்களை கைப்பற்ற தீவிரமடையும் போர்

லிபியாவின் இரண்டு முக்கிய எண்ணெய் முனையங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான போர் அங்கு தீவிரமடைந்து வருகிறது.

படத்தின் காப்புரிமை MAHMUD TURKIA/AFP/Getty Images

ராஸ் லனுஃப், எஸ் சிடர் ஆகியவற்றை முற்றுகையிடுவதற்கு பென்காசி பாதுகாப்பு படையினர் என்று அறியப்படும் ஆயுதக்குழு ஒன்று வெள்ளிக்கிழமை தாக்குதல் ஒன்றை தொடங்கியுள்ளது.

அவர்கள் இந்த எண்ணெய் முனையங்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இவற்றிற்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகங்களை மட்டுமே இந்த ஆயுதப்படை கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதாக எண்ணெய் வளத்துறையோடு தொடர்புடைய வட்டாரங்கள் கூறுகின்றன.

லிபியாவின் கிழக்கில் பெரும் பகுதியை தன்னுடைய அதிகாரத்தின் பிடியில் வைத்திருக்கும், ராணுவத்தை விட்டு வந்துவிட்ட தளபதி கலிஃபா ஹாஃப்தாரின் கட்டுப்பாட்டில் இந்த இரு எண்ணெய் முனையங்களும் இருந்து வந்துள்ளன.

லிபிய தேசிய படை என்று அறியப்படும் அவருடைய படைப்பிரிவுகள் வான்வழி தாக்குதல்கள் மூலம் பதில் தாக்குதலை அதிகரித்து வருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்