மலேசியாவுக்கான வட கொரிய தூதரை நாட்டை விட்டு வெளியேற்ற மலேசியா முடிவு

  • 4 மார்ச் 2017

மலேசியாவுக்கான வட கொரிய தூதரை நாட்டை விட்டு வெளியேற்ற மலேசியா முடிவு செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

அடுத்த 48 மணிநேரத்திற்குள் வட கொரிய தூதர் கிம் சோல் மலேசியாவை விட்டு வெளியேற வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட மூத்த சகோதரர் கிம் ஜோங் நாம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட புலனாய்விற்கு வடகொரியா தெரிவித்த விமர்சனத்திற்கு, அது மன்னிப்பு கேட்க வேண்டுமென மலேசியா கோரியதாக வெளியுறவு அமைச்சர் அனிஃபா அமான் கூறினார்.

மன்னிப்பு கேட்கப்படாததால், மலேசியாவுக்கான வட கொரிய தூதரை நாட்டை விட்டு வெளியேற்ற தீர்மானித்திருப்பதாக அவரது அறிக்கை கூறுகிறது.

சமீப காலம் வரை, இந்த இரு நாடுகளும் பொதுவாக நல்லுறவை பேணி வந்துள்ளன.

சட்டப்பூர்வமற்ற ஆயுத விற்பனை நடவடிக்கையை மூடிமறைக்க மலேசியாவிலுள்ள ஷெல் நிறுவனங்களை வட கொரிய உளவுதுறை நிறுவனங்கள் பயன்படுத்தியதாக வெளிவந்த தகவல்களுக்கு பிறகு, இந்த தீர்மானம் வந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்