மாயமான மலேசிய விமானத்தை தனிப்பட்ட முறையில் தேட நிதி திரட்டல்

  • 4 மார்ச் 2017

பயணிகளோடு வானில் பறந்து கொண்டிருந்தபோது மாயமாகிவிட்ட மலேசிய பயணியர் விமானத்தில் பயணித்தோரின் குடும்பத்தினர், தனிப்பட்ட முறையில் அந்த விமானத்தை தேடுகின்ற பணிக்காக நிதி திரட்டுவதற்கு பரப்புரையை தொடங்கியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

முன்பு தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டதில் இருந்து வடக்கில் இருக்கும் ஒரு பகுதியில் தேடுதல் பணி மேற்கொள்ள அவர்களுக்கு 15 மில்லியன் டாலர் தொகை தேவைப்படுகிறது.

239 பேரை ஏற்றி சென்ற எம்ஹெச்370 விமானம் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கிற்கு பறந்து கொண்டிருந்த வழியில் ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் காணாமல் போய்விட்டது.

எந்தவொரு தடயத்தையும் கண்டறிய முடியாததால், இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வ தேடுதல் வேட்டை இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் இடைநிறுத்தப்பட்டது.

இந்த சம்பவம் வரலாற்றில் ஒரு மர்மமாக போய்விடுவதை தான் விரும்பவில்லை என்று இந்த விமானத்தில் பயணித்தோரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்