சீன அரசின் இணையக் கட்டுப்பாட்டை `தைரியமாக' விமர்சித்த அதிகாரி

சீன அரசு இணையத்தில் மேற்கொள்ளும் தணிக்கையால், நாட்டில் அறிவியல் ஆய்வும், பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படுவதாக எச்சரிக்கை விடுத்து, ஓர் அரிய நிகழ்வாக, மூத்த சீன அதிகாரி ஒருவர் அரசாங்கத்தை விமர்சித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை li xin/AFP/Getty Images
Image caption அரசியல் ரீதியாக தீங்கற்ற உள்ளடக்கங்களை கொண்டுள்ள இணைய தளங்களுக்கு கட்டுப்பாடுகள் தளத்தப்பட கோரிக்கை

சீனாவின் நாடாளுமன்ற ஆண்டு கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில் தற்போது நடைபெற்று வருகின்ற ஆலோசனை மாநாட்டின் துணை தலைவராகவும், முன்னாள் விஞ்ஞானியாகவும் சீன லுவோ ஃபுஹெ என்ற அந்த அதிகாரி விளங்குகிறார்.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் இணைய தளங்கள் உள்பட அரசியல் ரீதியாக தீங்கற்ற உள்ளடக்கங்களை கொண்டுள்ளவற்றிற்கு இணைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சீனாவின் இணைய கட்டுப்பாடுகள் அரசியல் சார்ந்த உணர்வார்ந்த தலைப்புகளை பற்றிய இணைய கலந்தாய்வுகளை நீக்கிவிடும் அதேவேளையில், பெரும்பாலான சமூக ஊடகங்கள் மற்றும் வெளிநாட்டு செய்தி இணையத்தளங்களையும் தடுத்துள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்