அமெரிக்காவில் சீக்கியர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு; ஒரு வாரத்தில் இரண்டாவது இந்தியர் மீது தாக்குதல்

அமெரிக்காவில் உள்ள சியாட்டில் புறநகர் பகுதியில் சீக்கிய மதத்தை சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய துப்பாக்கித்தாரியை போலீஸார் தேடி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை JEWEL SAMAD / AFP / GETTYIMAGES

இந்த தாக்குதலில் கையில் குண்டு பாய்ந்த சீக்கிய நபருக்கு 39 வயதாகிறது.

அவர் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

''சொந்த நாட்டிற்கு திரும்பிச்செல்'' என்று துப்பாக்கித்தாரி அந்த சீக்கிய நபரை பார்த்து கூச்சலிட்டவாறு துப்பாக்கியால் சுட்டதாக சியாட்டல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஓலெத் துப்பாக்கிச்சூடு : இந்தியர்களை காப்பாற்ற முயன்ற அமெரிக்கருக்கு இந்தியா வர அழைப்பு

இரவு 8 மணியளவில் நெடுஞ்சாலையில் உள்ல தனது பணியிடத்தில் அவர் வேலை செய்து கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர் அருகே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அந்த சந்தேக நபர் சொந்த நாட்டிற்கு செல் என்று கூறியதாகவும் இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளதாக ஏ பி நிறுவனம் கூறுகிறது.

துப்பாக்கித்தாரி வெள்ளையாகவும், 6 அடி உயரம் மற்றும் ஆஜானுபாகவும் இருந்ததாக தாக்குதலில் பாதிக்கப்பட்ட சீக்கிய நபர் போலீஸாரிடம் கூறியுள்ளார். மேலும் அந்த நபர், தனது முகத்தின் கீழ் பகுதியை துணியால் மறைத்திருந்ததாகவும் சீக்கிய நபர் தெரித்துள்ளார்.

அமெரிக்கா : இந்தியர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு இனவெறிதான் காரணமா - இந்தியா அதிர்ச்சி

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு அதிகாரிகள் மற்றும் பிற சட்ட ஒழுங்கு அதிகாரிகளிடம் பேசியிருப்பதாக கென்ட் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை FACEBOOK
Image caption ஸ்ரீனிவாஸ் குச்சிபூட்டலா (முதல் நபர்), அலோக் மாடாசானி மற்றும் இயன் கிரில்லாட் இத்தாக்குதலில் காயம் அடைந்துள்ளனர்

முன்னர் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி ஓலெத்தில் உள்ள ஆஸ்டின்ஸ் பார் ஆண்ட் கிரில் என்ற மதுவிடுதியில் துப்பாக்கித்தாரி என சந்தேகிக்கப்பட்ட ஆடம் பியூரின்டன் என்பவர், ''நாட்டைவிட்டு வெளியேறு'' என்ற கத்தியவாறு, ஸ்ரீனிவாஸ் குச்சிபூட்லா மற்றும் அலோக் மாடாசானி என்ற இரு இந்திய பொறியியலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

அமெரிக்கா : இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்டது இனவெறி தொடர்புடையதா என விசாரணை

இந்த தாக்குதலில் குச்சிபூட்லா பலியான நிலையில், மாடசானி படுகாயம் அடைந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்