சோமாலியா : 48 மணி நேரத்தில் பட்டினியால் 110 பேர் பலி

சோமாலியாவில் கடும் பஞ்சம் நிலவிவரும் நிலையில், கடந்த 48 மணிநேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து மட்டும் பட்டினியால் 110 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஹசன் அலி ஹைரே தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தென் மேற்கு பே பகுதியில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவிவரும் நெருக்கடியான காலக்கட்டத்தில் வெளியாகும் முதல் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை இது.

ஆனால், நாட்டின் மீதான வறட்சியின் முழு தாக்கம் இன்னும் தெரியவில்லை. வறட்சியைத் தொடர்ந்து மிகப்பெரியளவில் பஞ்சம் ஏற்படும் என்று மனிதநேய குழுக்கள் அஞ்சுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

தற்போது, சோமாலியாவில் வாழும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள் உணவு பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர்.

பே பகுதியில் உள்ள அடிண்லே நகரில் காலரா காரணமாக டஜன் கணக்கானோர் உயிரிழந்து வருவதாக செய்தி நிறுவனமான அல்டாக்டோ தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

குடிப்பதற்கு சுத்தமான நீர் இல்லாத சூழலில் இந்த நோய் அதிகமாக பரவும் தன்மை கொண்டது.

கடந்த செவ்வாய்க் கிழமையன்று, சோமாலிய அதிபர் முகமது அப்துல்லாஹி ஃபெர்மாஜோ, வறட்சியை தேசியப் பேரழிவாக அறிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்