ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் துருக்கியின் அரசியல் பிரசாரம் கூடாது - ஆஸ்திரிய அதிபர்

  • 5 மார்ச் 2017

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் துருக்கிய அரசியல்வாதிகள் அரசியல் பிரசாரம் மேற்கொள்வதை தடை செய்யவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆஸ்திரிய அதிபர் கிரிஸ்டியன் கெர்ன் அழைப்பு விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை DIETER NAGL/AFP/Getty Images
Image caption ஐரோப்பிய ஒன்றிய அளவில் அரசியல் பரப்புரைக்கு தடை விதிப்பது நல்லது என்று கிரிஸ்டியன் கெர்ன் பேட்டி

துருக்கியில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அரசியலமைப்பு சீர்திருத்த வரைவின் மீதான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு குறித்து ஜெர்மனியில் வசிக்கும் சுமார் மூன்று மில்லியன் துருக்கியர்களிடம் பிரசாரம் செய்ய அமைச்சர்களை துருக்கி அதிபர் ரெசீப் தாயிப் எர்டோகன் அனுப்பிவருகிறார்.

துருக்கியின் அழுத்தத்தில் தனிமைப்படுத்தப்படுவதாக பிற நாடுகள் உணர்வதை தடுக்க, அரசியல் பிரசாரத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய அளவிலான தடை விதிப்பது உதவும் என்று, வெல்ட் அம் சோண்டாக் என்ற ஜெர்மன் நாளிதழிடம் கெர்ன் தெரிவித்தார்.

ஜெர்மனியில் இரு தனியார் நிகழ்ச்சிகளில் துருக்கியின் பொருளாதார அமைச்சர் பேசுகிறார், ஆனால் பல்வேறு நகரங்களில் நடைபெறுவதாக இருந்த கூட்டங்கள் பாதுகாப்பு அல்லது அனுமதி தேவைப்படுகின்ற காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்