இராக்கில் அரசு படைக்கும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையில் கடும் சண்டை

  • 5 மார்ச் 2017

இராக்கில் அரசு துருப்புகளுக்கும், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவினருக்கும் இடையே, மொசூலின் மேற்குப்பகுதியில் கடும் சண்டை நடைபெறுகிறது.

படத்தின் காப்புரிமை Reuters

இரண்டு வாரங்களுக்கு முன்பு மேற்குப்பகுதியின் பாதியை மீட்கும் நடவடிக்கைகள் துவங்கியதில் இருந்து இதுதான் தீவிரமான மோதல் என, இராக் இராணுவ காமாண்டர் ஒருவர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

மோசமான வானிலை காரணமாக நடவடிக்கை தாமதப்படுத்தப்பட்டது. அமெரிக்க வான் படையின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில், பழைய நகரின் அருகே அரசு கட்டடங்கள் அமைந்திருக்கும் இடத்தின் சில நூறு மீட்டர்கள் அருகில் அரசு துருப்புகள் நெருங்கிவிட்டன.

தற்போது சண்டை நடைபெற்றுவரும் மொசூலின் மேற்குப் பகுதியில் இருந்து 45 ஆயிரம் மக்கள் வெளியேறிவிட்டதாக புலம் பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு கூறுகிறது.

மூன்று மாத சண்டைக்கு பிறகு, கடந்த ஜனவரியில் தான் மொசூலின் கிழக்குப்பகுதியை இராக்கிய அரசு மீண்டும் கைப்பற்றியது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்