அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டதா? விசாரணை கோரும் வெள்ளை மாளிகை

  • 5 மார்ச் 2017

கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் பரப்புரையின்போது பராக் ஒபாமா நிர்வாகம் அதனுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதா என்பது தொடர்பாக சோதனை செய்ய அமெரிக்க நாடாளுமன்றத்தை வெள்ளை மாளிகை கேட்டுகொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது தன்னுடைய தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்டன என்று சனிக்கிழமை அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை வந்துள்ளது.

சாத்தியமான அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வுகள் என அது விவரித்திருக்கும் அறிக்கைகள் கவலையளிப்பதாக வெள்ளை மாளிகையின் அறிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நேரத்தில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக்க் கூறப்படும் குற்றச்சாட்டுக் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றப் புலனாய்வுக் குழுவிடம், அதன் விசாரணை எல்லைகளை விரிவுபடுத்துமாறு அதிபர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption டிரம்ப் “ஏமாற்றுகாரர்களின் தலைவர்” என்று அமெரிக்க நாடாளுமன்ற சிறுபான்மையினர் தலைவர் நான்சி பெல்லோசி முத்திரை குத்தியுள்ளார்

இந்நிலையில், அமெரிக்காவின் எந்தவொரு குடிமகனையும் கண்காணிக்க ஒபாமா ஆணையிடவில்லை என்று தெரிவித்ததாக அவரது செய்தி தொடர்பாளர் சனிக்கிழமை கூறினார்.

அமெரிக்க சட்டப்படி, சந்தேகிக்கப்படும் நபர் அன்னிய சக்தியின் முகவர் என்று நம்பப்படுவதற்கான சாத்தியக்கூறு இருந்தால் மட்டுமே அவரது தொலைபேசியை ஒட்டுக்கேட்க அனுமதிக்க முடியும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்