டிரம்பின் தொலைபேசி ஒபாமாவால் ஒட்டு கேட்கப்பட்டதான குற்றச்சாட்டிற்கு எஃப் பி ஐ இயக்குநர் மறுப்பு

அதிபர் டிரம்பின் தொலைபேசி உரைகளை பராக் ஒபாமா ஒட்டு கேட்டதாக டிரம்பால் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை எஃப்பிஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமி மறுத்துள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Reuters

டிரம்பின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரிக்க வேண்டும் என நீதித்துறையை, கோமி கேட்டுக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் குற்றச்சாட்டுகளை நீதித்துறை இன்னும் அவ்வாறு நிராகரிக்கவில்லை.

முன்னதாக அமெரிக்காவின் முன்னாள் தேசிய உளவுத்துறை இயக்குநர் ஜேம்ஸ் கிளப்பர், அதிபர் டிரம்பின் தொலைபேசியோ அல்லது அவரின் தேர்தல் பிரசார குழுவின் அலைபேசியோ ஒட்டுக் கேட்கப்படவில்லை என மறுத்திருந்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஒபாமாவின் அரசாங்கம் அதிகார துஷ்பிரயோகம் செய்ததா என கண்டறிய வெள்ளை மாளிகை நாடாளுமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

அதிபர் தேர்தலில் ரஷிய தலையீடு குறித்த குற்றச்சாட்டு பற்றி விசாரித்து வரும் நாடாளுமன்ற உளவுத் துறை கமிட்டியும் இந்த குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்